மத்திய தேர்வாணையத்தால்(சிபிஎஸ்இ ) நடத்தப்படும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இந்த தேர்வு முடிவுகளில்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் 12 மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சௌ.லோகேஷ் என்ற மாணவி 483/ 500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கௌரிசங்கர நாராயணன் மாவட்ட அளவில் 482/ 500 மதிப்பெண் பெற்று 2-வது இடத்திலும்,பிரியதர்ஷன் 481 /500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3-ஆம் இடம் பெற்றுள்ளார்.

10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தியாகராஜன் 493/ 500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், விஷால் 487 /500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2-ஆம் இடமும், சுவாதி 485/500 மதிப் பெண் பெற்று மாவட்ட அளவில் 3-வது இடமும் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதல்,இரண்டு, மூன்றாம் இடம் பிடித்து சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் செல்லப்பன் ,முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்
செய்தி & படங்கள்
சிங்தேவ்