காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.

காரைக்குடி அருகே மானகிரி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (15.03.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் KR.மாலதி CEO ,Auuro Educational Services கலந்து கொண்டு சிறப்பித்தார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன் .திரு.K. அருண்குமார் திருமதி .ப்ரீத்தி அருண்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் முதல்வர் திருமதி . உஷா குமாரி அவர்கள் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

மழலையர்களுக்கான பட்டங்கள் வழங்கும் நிகழ்வும் இனிதே அரங்கேறியது. மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் தமது உரையில், விஞ்ஞானத்தால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்றும், இணையதளம் உலகிற்கு முன்னால் அபரிதமான விஷயங்கள் அடங்கிய கிடங்கை திறந்து விட்டிருப்பது உண்மை என்றாலும் இதற்கு குழந்தைகள் அடிமை ஆவதும் அதிகரித்து வருகிறது. இதனால் கண்கள் சோர்வும், போதிய உறக்கமின்மையும் கல்வி கற்பதில் கவனக் குறைவும் ஏற்படுகிறது.

அதனால் இணையதளத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுவதை இளம் சிறார்கள் தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அறிவென்னும் விளக்கேற்றி அன்பென்னும் வழியை காட்டும் கலங்கரை விளக்கமாக திகழும் ஆசிரியர்களையும் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் திரு .SP.குமரேசன் அவர்கள் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன். திரு. அருண்குமார் அவர்கள் பேசுகையில் அகப்பயணமே நீண்ட பயணம்.இப் பயணத்திற்கு தொடக்கப் பள்ளியே சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது .அதன் தொடக்கமே இப் பட்டம் வழங்கும் விழா என்றார்.

மாணவர்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பள்ளியின் துணை முதல்வர். திருமதி. பிரேம சித்ரா அவர்கள் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். ஆசிரியர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நன்றி நவிலுடன் விழா இனிதே நிறைவுற்றது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

சனாதன வழக்கில் உதயநிதி மீது புதிய வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை..

காரைக்குடி இரயில் சந்திப்பில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினா் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

Recent Posts