காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024- போட்டி…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நடத்தும் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024-க்கான போட்டிகள் 10.09.2024 முதல் 13.09.2024 வரை நடைபெற உள்ளது .இந்த போட்டியின் தொடக்க விழா இன்று 11.09.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா,பாண்டிச்சேரி,அந்தமான் நிகோபர் ஆகிய பகுதிகளில் உள்ள 260 பள்ளிகளிலிருந்து 920 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை துணை ஆட்சியர் திரு. ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் அவர்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தலைமை ஏற்க,செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் S.P. குமரேசன் மற்றும் துணைத் சேர்மன் K. அருண்குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024- போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி. உஷா குமாரி அவர்கள் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சார்பிலும்,தென் மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024- குழுவின் சார்பிலும் அனைவரையும் வரவேற்றார்.

தென்மண்டல கூர்ந்தாய்வாளர் (Observer) திரு. துரை,காரைக்குடி தாசில்தார் திரு.ராஜா அவர்கள், தொழில்நுட்ப உதவியாளர் திரு. கார்த்திக் ,விழாவின் தொழில்நுட்ப சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இராமலிங்க பாரதி,தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத் தலைவர் சாக்ரடீஸ்,செயலாளர் சித்தேஷ் ,டேக்வாண்டோ சங்கத்தின் துணைத் தலைவர் தரணி முன்னிலையில் துணை ஆட்சியர் அவர்கள் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் ஒருங்கிணைந்த குழுவிடம் கோப்பையை வழங்கினார்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணைத் தாளாளர் K. அருண்குமார் அவர்கள் பேசுகையில் , “கல்வியோடு விளையாட்டையும் தங்கள் இரு கண்கள் என மாணவர்கள் நினைக்க வேண்டும் என்றும்” :எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மைத் தேடி வரும் என்றும்”கூறினார்.

அதனைத் தொடர்ந்து தேவகோட்டை துணை ஆட்சியர் திரு. ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்களை ஊக்குவிக்குமாறு ‘அதிகமான சாதனைகளைப் பெற அனைத்து மாணவர்களும் உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும் என்றும் , தினந்தோறும் உடற் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டால் மூளையின் வளர்ச்சி 60% அதிகரிக்கும் என்றும், “உடற்பயிற்சியே மாணவர்களின் வெற்றிக்கு முதல் படி” – என்றும், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் அநேக விளையாட்டுகளில் பங்கேற்று மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாது தனித் திறன்களிலும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024-ஆம் ஆண்டிற்கான முதல் கட்ட போட்டிகளை விழாவின் சிறப்பு விருந்தினர் மற்றும் அனைவரும் தொடங்கி வைத்தனர். பள்ளியின் துணை முதல்வர் பிரேம சித்ரா அவர்கள் மற்றும் ஆசிரியர்களும் விழாவின் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை..

திருவண்ணாமலைக்கு பௌர்ணமியை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்..

Recent Posts