சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 15வது ஆண்டு விழா மானகிரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், (அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர், தமிழக அரசு) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினராக திரு. ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் சப் கலெக்டர் மற்றும் திரு. செந்தூர் பாரி தலைவர் எக்னோரா சர்வதேச அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் உயர்திரு எஸ் பி .குமரேசன், திருமதி.சாந்தி குமரேசன், துணை சேர்மன் திரு. அருண்குமார், திருமதி. ப்ரீத்தி அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அறிவியல் துறை தலைவி மற்றும் செகண்டரி ஒருங்கிணைப்பாளர் திருமதி. தேனிலா வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் திருமதி. உஷா குமாரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி துணை முதல்வர் திருமதி. பிரேம சித்ரா அவர்கள் ஆண்டு விழாவின் மையக்கருக்தை அறிமுகம் செய்தார். மாணவர்களின் வண்ணமயமான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இசை கதம்பம் என்பதை மையமாகக் கொண்டு கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
முதன்மை விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு அழைப்பாளர்கள், செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன், துணைச் சேர்மன் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தது.
விழா சிறப்புரையில் திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள் ஒவ்வொருவருடைய கடும் உழைப்பும் விடா முயற்சியுமே அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் என்றார். சேர்மன் திரு. எஸ் பி குமரேசன் அவர்கள் பேசுகையில், மாணவர்கள் கல்வி மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார். பள்ளியின் வளர்ச்சிக்கு ஒற்றுமையாக பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். கல்வி, இசை, நாட்டியம், ஓவியம் எக்கலையானாலும் சரியான பாதையில் பயணித்தால் வெற்றி பெறலாம் என்றும் கூறினார்.
பள்ளி மாணவர் தலைவர் சுதர்ஷ் மற்றும் மாணவர் தலைவி ரீமா நன்றியுரை கூறினர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்