காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை 2 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை. கடத்தல் குறித்த விசாரணையில் பல சுவராஸ்மான சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
10 12 2020ஆம் தேதி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இரவு 9.30 மணிக்கு காரைக்குடி செக்காலை முதல் வீதியைச் சேர்ந்த அருண் ஆரோக்கியம் என்பவரது மனைவி தைனிஷ் மேரி என்பவர் தனது ஒரு மாத கைக்குழந்தையை தனது மாமியார் தூக்கி சென்றதாகவும் பின்பு தனது மாமியார் குழந்தையை காணவில்லை என்று சொல்வதாகவும் புகார் கொடுத்தனர்
புகாரை பெற்ற காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து காரைக்குடி உட்கோட்ட காவல் துணை துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு அருண் அவர்கள் தலைமையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு சுந்தர மகாலிங்கம் ,சார்பு ஆய்வாளர் திரு தினேஷ், தலைமை காவலர் கருப்பையா மற்றும் காவலர் கருணாகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் கைக்குழந்தையின் தாய் குழந்தைக்கு பசிக்குமே எனத் தவிக்கும் போது குழந்தையை தொலைத்த மாமியார் ராஜேஸ்வரி பதற்றம் இல்லாம் இருந்தார்.. ஒரு கட்டத்தில் ராஜேஸ்வரி குழந்தையை வைத்திருப்பவர்கள் சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்வார்கள் என்றார்.. விசாரித்த போலீசார் ஒரு நிமிடம் திகைத்து ராஜேஸ்வரியை துருவி துருவி விசாரண நடத்தினர்.
அப்போது அவர் தன் நாடகத்தை ஒப்புக் கொண்டு உண்மையை உளரிக் கொட்டினார்.
தன் மகனாகிய அருண் என்பவரும் தைனீிஸ் மேரி என்பவரும் கடந்த பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் விரக்தியில் இருந்த ராஜேஸ்வரி தனது பேரனை தனது கணவராகிய ஆரோக்கியத்திடம் காண்பிப்பதற்காக தூக்கி செல்வதாக சொல்லி சென்று தனது வீட்டின் அருகில் வசிக்கும் பாத்திமா என்பவரின் மகளுக்கு குழந்தை இல்லாமல் இருப்பதனால் இந்த குழந்தையை வைத்துக் கொள்ளுமாறு சொல்லி வற்புறுத்தி அவரிடம் கொடுத்துவிட்டு தனது மகனிடம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் என்று பொய்யாக நடித்தாக ஒப்புக் கொண்டார்.
இரவோடு இரவாக குழந்தை மீட்கப்பட்டு அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது இது தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகின்றது.
செய்தி & படங்கள்
சிங் தேவ்.