காரைக்குடியில் காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழக அரங்கில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இரயில் பயணிகள் மற்றும் இரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய பயணிகள் இரயில் குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்றது. அதில்
காரைக்குடி இரயில் நிலையத்தில், பழைய நடைமேம்பாலத்தில் பயணிகளுக்கு துளியும் பயன்படாத நிலையில், கட்டுமானப்பணி நடந்து வரும் மின் தூக்கி (லிப்ட்)யை நிறுத்தப்பட வேண்டியும், இடமாற்றம் செய்யுமாறும் மாபெரும் தடுக்கும் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பணியை நிறுத்துமாறு மதுரை இரயில்வே DRM அதிகாரியிடம் முறையிடுவதெனவும் பேசி முடிவு செய்யப்பட்டது.அடுத்து நடைபெறக்கூடிய கூட்டத்தில் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்து அதை வலுவாக தீவிரமான செயல்படுவது எனவும் முடிவு செய்தனர்.இக்கூட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழக அலுவலகத்தில் நவ – 30 வியாழன் மாலை 6.30- க்கு நடந்தது.
கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் S.RM.பாலசுப்பிரமணியம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் S.கண்ணப்பன், பொருளாளர் KN. சரவணன் (SLP) துணை தலைவர் காசிவிசுவநாதன் இணைச்செயலாளர்கள் AR.கந்தசாமி, S.சையது V.R. இராமநாதன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றார்கள்,மேலும் காரைக்குடி நகர் மன்ற உறுப்பினர் அமுதா, ராதா, ராம்குமார், குரு பாலு, ரத்தினம் கலந்து கொண்டனர்.
செய்தி &படங்கள்
சிங்தேவ்