
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து காரைக்குடியில் 250 பேருக்கு கரானா நிவாரணம் வழங்கினர்.
காரைக்குடி நாடக நடிகர் சங்கம், மேடை மெல்லிசை கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர் என 250 பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரண பொருட்களாக வழங்கும் விழா கம்பன் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாங்குடி தலைமை வகித்தார்.
காரைக்குடி KMGC Trust திரு. சக்தி .A.திருநாவுக்கரசு, தலைவர் , முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு.Rtn.S.பெரியண்ணன், காரைக்குடி வட்டாசியர் திரு.S. அந்தோணிராஜ்,காரைக்குடி பெரு நகராட்சி ஆணையாளர், திரு R.லெட்சுமணன் முன்னிலையில்,
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. M.இராஜராஜன் , தேவகோட்டை கோட்டாட்சியர், திரு.அ.வே.சுரேந்திரன், கரோனா நிவாரணப் பொருட்களை பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தனர்.

விழாவை கத்தார் நகரத்தார் சங்க திரு. மகேஷ் ,காரைக்குடி KMGC Trust திரு.L.M. லெட்சுமணன் ,இருவரும் ஒருங்கிணைத்தனர்.
விழா ஏற்பாடுகளை தொழில் வணிக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் Lion.S.கண்ணப்பன் பொருளாளர் K.N.சரவணன் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்