காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தியபோது..

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், புராதனக் கலைகளைத் தன்னகத்தைக் கொண்ட காரைக்குடி நகரின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாகவுள்ளது.

பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றதாத ஊழல்நிறைந்த அதிமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும்,திமுக இலக்கிய அணி தலைவருமான .மு.தென்னவன் தலைமையில் காரைக்குடி திமுக நகர செயலாளார் நா.குணசேகரன் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள்


கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேறாமல் காரைக்குடியில் நகர் சாரலைகள்,தெருக்கள் முமுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது

இதனால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் 10 ஆண்டுகாலமாக நிறைவேற்றாமல் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றதாத ஊழல்நிறைந்த அதிமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும்,திமுக இலக்கிய அணி தலைவருமான .மு.தென்னவன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கில் திமுகவினர் சாலையில் உருளும் போராட்டம் நடத்தினர்.


போராட்டத்தில் காரைக்குடி திமுக நகர செயலாளார் நா.குணசேகரன் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…

“அர்னாபின் ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு தடை விதிக்க வேண்டும்” : இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு…

Recent Posts