காரைக்குடியில் இன்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
வாட்டர் டேங்க் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மீன் கடைகளில் சோதனை நடத்தியதில் மீன் கடைகளில் விற்பனைக்குள்ள மீனை அதே இடத்தில் ஆய்வு செய்ததில் சில கடைகளில் இராசயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீன்கள் கெடாமல் இருப்பதற்கு இரசாயனம் தடவியது உறுதியானது. இதனை அடுத்து 10 கிலோ மீன்கள் பறிமுதல் செய்ப்பட்டது.
இந்த மீன்கள் இராமநாதபுரம்,துாத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளது. இரசாயனம் தடவிய மீன்களை விற்ற மீன் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார் டாக்டர் பிரபாவதி.
பல இறைச்சிகடைகளில் வெட்டப்பட்ட ஆடுகளில் நகராட்சி முத்திரை இல்லாதது கண்டுபடிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலை தொடர்ந்தால் அபராதத்துடன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.
இது போல் பல தேநீர் கடைகளைச் சோதனை செய்தபோது அவர்கள் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் கட்டித் தருவது தெரியவந்தது. அவர்களுக்கு முதல் தடவையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சோதனையில்உணவு பாதுகாப்பு ஃபாஸ்சாய்( FSSAI) சேர்ந்த 10 -க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்