காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

காரைக்குடியில் குளோபல் மிசின் மல்டிகேர் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிசின் மல்ட்டிகேர் மருத்துவமனை தொடங்கி முதலாமாண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் குளோபல் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர். குமரேசன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று . உயிர் என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் உடல் இயக்கத்தை கண்டறியும் செயலிக்கான ஆராய்ச்சி துவக்கம் பற்றி விளக்கினார்.

தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பண் அவர்கள் சிறப்புரையாற்றி மருத்துவமனையை வாழ்த்தினார், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இல்லம்தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் அவசர உதவிகளுக்கு அழைத்தால் இரு இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கே வந்து மருத்துவ உதவி செய்யும் திட்டத்தையும், அட்வான்ஸ் ஸ்பசல் டயப்படிக் கேர் சென்டர், டயாலிசஸ் சென்டர் திறந்து வைத்தார்,மேலும் ஏழைய எளிய மக்களுக்கான இலவசம் மற்றும் சலுகை கட்டணத்தில் மருத்துவ பார்க்க அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான மதுரை மாதவன் ஹர்ட் சென்டருடன் ஒப்பத்தம், முன்னாள் அமைச்சர் தென்னவன் மருத்துவமனையின் டைம்ஸ் ஹல்த்கேர் பவுண்டேசன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் செய்த சமூக சேவைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.


காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி தலைவர் முத்து துறை , மருத்துவமனை இணை இயக்குனர் விவேகாநந்தன், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர..
செய்தி & படங்கள்
சிங்தேவ்

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Recent Posts