
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் , அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம், 17 வயது சிறுமிக்கு 7கிலோ சினைப்பை நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளது.
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் (அட்வான்ஸ்டு லேப்ராஸ்கோப்பி) மூலம் அறுவை சிகிச்சை செய்யாமலேயே நுண்துளை தொழில்நுட்பத்தின் வாயிலாக, கத்தியின்றி, இரத்தமின்றி, தழும்பின்றி .17 வயது சிறுமிக்கு, வயிற்றில் 7 கிலோ அளவுள்ள சினைப்பை நீர்க்கட்டியை மருத்துவமனை சிறப்பு மருத்துவர் டாக்டர் அருண் மொழி விஜய் அவர்கள் தலைமையில் அகற்றி வெற்றிககரமாக சாதனை புரிந்துள்னளனர்.

இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.குமரேசன் அவர்கள் கூறும் போது, காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது ஆன சிறுமி கடந்த ஆறு மாதமாக வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.
இந் நிலையில் கடும் வயிற்று வலியில் துடிதுடித்த நிலையில் ஜன., 3-ஆம் தேதி நமது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் சினைப்பை நீர்க்கட்டி பெரிய அளவில் 7 கிலோ இருப்பதை உறுதி செய்தோம்.
உடனடியாக நமது மருத்துவமனை அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி சிறப்பு மருத்துவர் அழைக்கப்பட்டு பரிசோதித்து அவர் ஆலோசனையின் படி கத்தியின்றி, இரத்தமின்றி, தழும்பின்றி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக 7 கிலோ நீர் கட்டியை அகற்றினோம். இப்போது சிறுமி நலமாக உள்ளார் என தெரிவித்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்