காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனை : பிறவியிலேயே ஒரு பக்க கிட்னி குறைபாடு உள்ள 8 மாத குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை..

பிறவியிலேயே ஒரு பக்க கிட்னி குறைபாடு உள்ள 8 மாத குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளது காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனை

ஒரு பக்க சிறுநீரகம் செயலிழக்கும் சூழ் நிலையில் எட்டு மாத குழந்தை அவதி பட்டு வந்த நிலையில் காரைக்குடி குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் சிறுநீரகத்தை செயல்பட வைத்தனர் இது குறித்து மருத்துமனை தலைமை மருத்துவர் குமரேசன் கூறும்போது

கடந்த 5 நாட்களுக்கு முன் ஒரு பக்க சிறுநீரகம் செயல் இழக்கும் சூழ்நிலையில் 8 மாதக் குழந்தையை அனுமதித்து பரிசோதனை செய்ததில் பிறவியிலேயே சிறுநீரக குறைபாடு இருந்தால் அதாவது கர்பத்தில் 5 மாத பரிசோதனையிலேயே சிறுநீரக குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டிருந்தால், பிறந்த பிறகு அறுவை சிகிச்சை செய்யாலாம் என்று முடிவெடுத்து இருந்தாலும் குழந்தை எடை குறைவாக பிறந்ததால் அப்போது சிகிச்சை செய்யமுடியவில்லை ,

தற்போது இந்த குந்தையை 4 நாட்கள் கவனித்து அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். குழந்தையின் குறை என்னவென்றால் பிறவியிலேயே ஒரு பக்கம் சிறுநீராகத்திற்கும் நீர் தாரைக்கும் இடைபட்ட பகுதி சுருங்கிய நிலையில் இருந்ததால் சிறுநீரகம் வீங்க தொடங்கிவிட்டது, இதை இப்படியேவிட்டால் செயலிழந்துவிடும்.

ஆகையால் சிறுநீரக அறுவை சிகிக்சை சிறப்பு மருத்துவர் அன்பழன் தலைமையிலான , குழந்தைகள் சிறப்பு மருத்துவர் , இருதய சிறப்பு மருத்துவர், மயக்க மருந்து சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தோம். முக்கியமாக இந்த மாதிரி சிக்கலான சிகிக்கையை பெரிய நகரங்களில் உள்ள மருத்துவ மனையில் தான் செய்வார்கள்.

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் நம் மருத்துமனையில் எங்கள் டைம்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் குறைந்த செலவில் வெற்றிகரமாக முடித்துல்லோம் என்றார்.

செய்தி& படங்கள்
சிங்தேவ்

‘நீட் தேவையில்லை’ : மாணவர்களுக்கான விருது விழாவில் நடிகர் விஜய் பேச்சு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு..

Recent Posts