காரைக்குடி அரசு பொது மருத்துவமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவ மனையில் (சூரக்குடி) மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையாளும் அஜாக்கிரதையாளும், மருத்துவமனையின் அலட்சியத்தாலும் பெண் ஒருவருக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சையில் ஏற்பட்ட தவறால் அவதியுற்று வருகிறார்.

அவருக்கு நீதி கிடைக்க வேண்டியும், அரசு மருத்துவர்களின் செயல்களையும் கண்டித்து
சிவகங்கை மாவட்ட சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பாஜக சார்பாக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் ஏ.நாகராஜன் தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் சி.செல்வா உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சந்திரா என்ற பெண் வயிற்றுவலி காரணமாக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் கர்ப்பபையில் பிரச்சனையிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு (சூரக்குடி) அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்படி அங்கு 14-09-2021 அன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் சிகிச்சையளித்து 21-09-2021 அன்று காலை 11.30 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அப்போது மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பப்பையுடன் யூரிட்டரையும் வெட்டியுள்ளனர்.

இதை சம்பந்தப்பட்ட நோயாளியிடம் தெரிவிக்கவில்லை,அதுபோல் அவரின் கணவரிடமோ அல்லது உறவினரிடமோ தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும் 55 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் வைத்து பின் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

சந்திராவிற்கு வயிற்றுவலி தொடர்ந்து இருந்து வந்ததால் காரைக்குடியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பரிசோதனை செய்த பின் 30-12-2022 மீண்டும் டாக்டர் ராம்மோகன் ராவ் இடம் சென்று காண்பித்த போதுதான் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் டியூப் வைத்து டாக்டர் முத்துக்குமார் செய்த தவறை மறைத்தது தெரியவந்தது.

இதனையறிந்தவுடன் டாக்டர் ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து கேட்டபோது அலட்சியமாகவும் மிரட்டும் தோணியிலும் பேசியதால் அச்சமடைந்து வெளியே வந்துள்ளார்கள். மறுநாள் டாக்டர் முத்துக்குமார் காந்தி-யை  சந்தித்துள்ளார்கள். அவரும் அலட்சியாக தவறு நடந்து விட்டது நீங்கள் வேண்டுமானால் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சந்திராவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகி வந்தது. எந்த மருத்துவரும் சிகிச்சையளிக்க தயங்கினர்.இது சம்பந்தமாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் யாதொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 07.02.2023 அன்று பாஜக மற்றும் மித்திரக்குடி ஊர் பொதுமக்கள் சார்பாக மித்தரக்குடி விளக்கு ரோட்டில் பேருந்து மறியல் பொராட்டமும்,09.02.2023 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

காரைக்குடி அரசு மருத்துவமனையின் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து காரைக்குடி அரசு மருத்துவமனை எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

இரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் காரணம் என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..

Recent Posts