காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.
இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக ஓரே நேரத்தில் கம்பன் திருவிழா தமிழ் சான்றோர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது.
கம்பன் மணி மண்டபத்தில் ஒரு விழாவாகவும் மற்றொன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா மண்டபத்தில் ஒரு விழாவாகவும் நடைபெறுகிறது. இரு கம்பன் விழாக்களிலும் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
காரைக்குடி கல்லுக்கட்டி மேற்று கிருஷ்ணா மண்டபத்தில் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
தலைமையில் 16.03.22 அன்று தெலுங்கான ஆளுநரும்,புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் தொடர்ந்து சொற்பழிவு கருத்தரங்கம்,பட்டிமன்றம் மற்றும்தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. கவிஞர்.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களுக்கு “கம்பன் அடிப்பொடி” விருது வழங்கப்படவுள்ளது. 3-ஆம் நாளில் கம்பன் அருட்கோயில் அமைந்துள்ள நாட்டரசன் கோட்டையில் விழா நடைபெறுகிறது.
இதுபோல் தமிழ்தாய் கோயில் அமைந்துள்ள கம்பன் மணிமண்டபத்தில் 16.03.2022 அன்று பிரபலத் தொழில் அதிபரும், கம்பன் கழக கௌரவத் தலைவருமான ஏ.சி. முத்தையா தலைமையில் கம்பன் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜார்கண்ட் மாநில மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம். கற்பக விநாயகம் தலைமையுரை நிகழ்துகிறார். ம்பன் சொல்லாழி சாகித்ய அகடாமி விருதாளர் திரு. நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றுகிறார்.மறுநாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் உரை நிகழ்துகின்றனர். கவியரங்கம், பட்டிமன்றம்,கம்பன் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
3-ஆம் நிகழ்சியாக நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள கம்பன் அருட்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
இரண்டு கம்பன் திருவிழாக்கள் தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உற்சாகத்தை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை..
செய்தி & படங்கள்
சிங்தேவ்