காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த அணிகளின் மாணவர்களுக்கு கல்விக் குழும தலைவர் அய்யப்பன் விருது வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்லுாரியில் பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவை கல்லுாரி முதல்வர் கற்பகமூர்த்தி வரவேற்றார். கிட் அண்டு கிம் கல்விக்குழுமத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் ” மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக பல்வேறு வகைகளில் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 16-வது மண்டலத்திற்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகளில் மாணவர்கள் முகேஷ்ராஜா, ராஜா, ஈஸ்வரன், ஸ்ரீபிரியா,சரண்குமார், காயத்திரி,ரோஷிகா,அடைக்கலம், துர்கேஷ்,காமாட்சி ஆகியோர் தங்கம்,வெள்ளி மற்றும் வெங்கலப் பதகங்களை வென்றவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இது தவிரஅண்ணா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கம் வென்றுள்ளனர். அதே போல் அண்ணா பல்கலைக்கழக கபடி மற்றும் கால்பந்து அணியில் நம் கல்லுாரி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். கல்விக்கு இணையாக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார்..
நிகழ்ச்சியில் எஸ்.ஆர.வி.வி சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி அய்யப்பன், கல்லுாரி இயக்குனர் ஜெயராஜா, செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன் நன்றி கூறினார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்