திருச்சி- காரைக்குடி இடையே மின்மயமாக்க ரயில் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியை அடுத்து குமார மங்கத்திலிருந்து காரைக்குடி வரை நாளை மின்மயமாக்கப்பட்ட மின்வழிப்பாதையை மதுரை கோட்ட மேலாளர் திரு.பி. ஆனந் ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகிவுள்ளது.ஆய்வு மட்டுமே நடைபெறகிறது சோதனை ஓட்டம் நடைபெறவில்லையென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியதாக குமாரமங்கலத்திருந்து -காரைக்குடிக்கு மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் ரயில் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட குமாரமங்கலத்திலிருந்து காரைக்குடி வரை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் திரு.பி.ஆனந் நாளை ( 17.02.2022) காலை 10 மணியளவில் தனி இரயிலில் ஆய்வு செய்யவுள்ளார்.
ஒவ்வொரு ரயில்நிலையங்களையும் அவர் ஆய்வு செய்கிறார். பிற்பகல் 1.40 மணிக்கு காரைக்குடிக்கு வரும் அவரை காரைக்குடி வர்த்தக சங்கம், ரயில்வே பயனாளிகள் சங்கம் சார்பில் சந்தித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3.40-க்கு காரைக்குடியிலிருந்து குமாரமங்கலம் வரை மீண்டும் ஆய்வு செய்கிறார்.
ஆய்வு முடிந்த பின் ஆய்வறிக்கையை பெங்களுருவில் உள்ள ரயில்வே போக்குவரத்து அலுவகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் பெங்களுருவிலிருந்து ரயில்வே போக்குவரத்து தரக் கட்டுப்பாடு அதிகாரி வந்து முழு பெட்டிகள் கொண்ட ரயிலில் சோதனை ஓட்டம் நடத்துவார். இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். அப்போது பொதுமக்களுக்கு ரயில்வே பாதைகளில் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை விடப்படும்.
ஆனால் நாளை நடைபெறுவது ஆய்வு மட்டுமே என்பதால் பொதுமக்களுக்கு எந்த எச்சரிக்கையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை. சில நாளிதழ்களில் நாளை சோதனை ஓட்டம் நடைபெறும் என தவறான செய்தி வெளியாகிவுள்ளது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்.