சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்(Stalin ASP karaikudi) அவர்கள் வியாழன் இரவு சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியை பதிவேற்றியிருந்தார்கள்.
அதில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வியாழன் மாலை 3.15 மணிக்கு 13 வயது பள்ளி மாணவிகள் அரிசுதா(13), ரம்யா(13) இருவரையும் காணவில்லையென புகார் அளித்தனர். காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிரடியாக காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளார் மற்றும் மகளிர் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினோம்.
முதலில் பெற்றோரிடமும், அக்கம் பக்கத்து வீட்டார் மற்றும் சகமாணவிகளை விசாரித்து வந்த நிலையல் அரிசுதாவின் தகப்பனாரின் செல்போனை ஆய்வு செய்ததில் இன்ஸ்டா கிராமில் ஆகாஷ் என்றவுடன் அரிசுதாவுக்கு நட்பு வட்டம் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களின் தோழிகளை விசாரித்தபோது அவள் ஆகாஷ்சைப் பார்க்கப்போவதாக சொன்னதாக மேலும் தகவல் கிடைத்தது. அவருடைய இருப்பிடம் குறித்து தகவல் தொழில்நுட்பம் மூலம் ஆகாஷ் துாத்துக்குடியில் இருப்பதாக தெரிந்தது. அவரின் செல் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் துாத்துக்குடி நகர காவல் ஆய்வாளார் ஜோ விற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரிசுதாவின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய அரிசுதா தாங்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்தனர். அந்த செல்போன் எங்கு உள்ளது என்பதை அறிந்ததில் அது துாத்துக்குடியிலிருந்து நகர்ந்து கொண்டே இருந்தது. இணைப்பு தொடரமுடியவில்லை, சிறிது நேரத்தில் இணைப்பு கிடைத்து அவரிடம் பேசியபோது அவர் ஒரு மலையாளி என்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர், துாத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் செல்வதாக தெரிந்தது. பேருந்து நடத்துனரிடம் போனை கொடுக்கச் சொல்லி அவரிடம் விசாரித்த போது இரு மாணவிகள் பயணம் செய்வதை காவல்துறையினர் உறுதி செய்து கொண்டு நடத்துனரிடம் அருகில் உள்ள எட்டயபுரக் காவல் நிலையத்தில் பேருந்தை கொண்டு செல்லுமாறு அறிவுறித்தினர். எட்டயபுரக் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து காவல் நிலையம் சென்றதும் இரு பள்ளி மாணவிகளையும் காவல் துறையினறிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவிகளுடன் ஆகாஷ் என்பவனையும் காவல்துறையினர் பிடித்து வைத்திருந்தனர்.
துாத்துக்குடி நகர காவல் ஆய்வாளர் ஜோ எட்டயபுரம் விரைந்து பள்ளி மாணவிகளை விசாரித்து தகவல் அனுப்பினர். காரைக்குடியிலிருந்து சென்று பள்ளி மாணவிகளை பத்திரமாக காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், துாத்துக்குடி நகர காவல் ஆய்வாளர் ஜோ,மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பூர்ணசந்திர பாரதி, பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் மோகன்லால் மற்றும் காவலர்களின் அதிவிரைவு செயல்பாட்டால் பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்டெடுத்ததாக தெரிவித்தார்.
இந்த தகவல் பரவியதை அடுத்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர் ஸ்டாலின் பதிற்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்தி & படங்கள்
சிங்தேவ்