
காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களின் ஏற்பாட்டில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 5 பொங்கல் பானைகள் வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் பொங்கல் வைத்தனர்.

பொங்கல் விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி. பாண்டி மெய்யப்பன், குமரேசன், கவுன்சிலர்கள் அஞ்சலிதேவி, அமுதா, ரத்தினம், ராதா பாண்டியன், கனகவல்லி ஹரிதாஸ் பிலோமினா திவ்யா சக்தி மங்கையர்க்கரசி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாலா, மாஸ் மணி, அருணா உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தேங்காய் பழத்துடன் பொங்கல் 300 பேருக்கு வழங்கப்பட்டது.

மாங்குடி எம்.எல்.ஏ அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொங்கல் விழா களைகட்டத் தொடங்கியது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்