காரைக்குடியில் மூமுக பொதுச் செயலாளர் எஸ்.ஆர் தேவர் மோசடி வழக்கில் கைது :தெலுங்கான போலீசார் அதிரடி..

காரைக்குடியில் இன்று அதிகாலை தெலுங்கான போலீசார் கழனிவாசல் வீட்டில் வைத்து மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவரை மோசடி வழக்கில் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி முன்பணமாக ரூ.5 கோடி வாங்கி ஏமாற்றியுள்ளார்.

தெலுங்கான போலீசாரிடம் மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்த நிலையில் தெலுங்கான போலீசார் இன்று அதிகாலை காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.

அவருக்கு கரோனா பரிசோதனை செய்து பின்னர் மாஜிஸ்டிரேட் முன் ஆஜர் படுத்தி விசாரணைக்காக தெலுங்கானா அழைத்து செல்லவுள்ளனர்.

எஸ்.ஆர்.தேவர் என்ற ராஜசேகரன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சூழி தொகுதியில் அதிமுக கூட்டணியில் மூமுக (சேதுராமன் பிரிவு) சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தமிழக அரசு அனுமதி மறுப்பு…

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?:எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி..

Recent Posts