வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்- திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகம் முன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர செயலாளர் கே.டி குமரேசன், கல்லல் வட்டாரத் தலைவர் ரமேஷ், கல்லல் யூனியன் கவுன்சிலர் கோவிலுார் அழகப்பன் மற்றும் காரைக்குடி நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது போல் காரைக்குடி நகர காங்கிரஸ் அலுவலகத்திலும் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்