காரைக்குடி அருகே புதுவயலில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் அதிமுக சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திமுக அரசின் சொத்துவரி உயர்வு,மின்கட்டண உயர்வு,பால்விலை,விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,நீட் தேர்வை ரத்து செய்யாதது போன்றவற்றை கண்டித்து சாக்கோட்டை ஒன்றிய கழகம் சார்பில் புதுவயல் பேரூந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சாக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும், மகளிரணியினரும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் சாக்கோட்டை கிழக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், மாசான்,மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் ராமு,சாக்கோட்டை ஒன்றிய உறுப்பினர்கள் சுப்பிரமணியன்,தேவி மீனாள்,தமிழ்ச்செல்வி,ராமச்சந்திரன்,முன்னாள் ஒன்றிய துணை தலைவர் அடைக்கலம்,ஒன்றிய துணை செயலாளர் வைரவபுரம் ஸ்ரீதர்,நிர்வாகிகள் ஆம்பக்குடி வீரசேகர், சி.கே.நாகராஜன், புதுவயல் சுரேஷ்,இளைஞரணி புதுவயல் அஜீஸ்,உள்பட நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.புதுவயல் அதிமுக கிளை செயலாளர் ராமு நன்றி கூறினார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..

காரைக்குடியில் மாயமான 13 வயது இரு பள்ளி மாணவிகளை 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை :குவியும் பாரட்டுகள்..

Recent Posts