
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது.

இதனைத் தொடரந்து இன்று காலை 10 மணிக்கு கடையின் முன் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர் அனைவரிடமம் பழைய செல்லாத காசுகள் இருந்தன, இந்த காசுகளை வாங்கிக் கொண்ட பிரியாணி வழங்கி தனது முதலாம் ஆண்டைக் கொண்டாடியது சில்வர் ஸ்பூன் உணவகம்.

இது குறித்து சில்வர் ஸ்பூன் உணவக உரிமையாளர். பேசும் போது எங்களது சில்வர் ஸ்பூன் உணவகம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அதன் முதலாம் ஆண்டு தினத்தை புதுமையாகக் கொண்டாடும் வகையில் பழைய செல்லாத ஒரு காசு,இரண்டு காசு,ஐந்து காசு,20 காசு,25 காசு அதாவது காலனா கொண்டு வருவோருக்கு பிரியாணி வழங்க திட்டமிட்டோம்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் குவிந்தனர் வரிசையில் காத்திருந்து பழைய காசுகளை கொடுத்து விட்டு பிரியாணி பார்சலை வாங்கிச் சென்றார் என்று தெரிவித்தார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்