
ராஜீவ் கொலையில் குற்றிவாளியாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலை அருகே காங்கிரசார் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் கொலையில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து கல்லுாரி சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலையருகே காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டி பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி,காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் இரத்தினம்,அஞ்சலி தேவி,அமுதா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்
“வன்முறையை எதிர்ப்போம்
கருத்து வேறுபாடுகளுக்கு
கொலை செய்வது
ஒரு தீர்வாகாது”..
“நெஞ்சு பொறுக்குதில்லையே”
என்ற பாதகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்