காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகடமி நடத்திய நீட் இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் கனவு நிறைவேறியுள்ள தேர்வான 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா (01.09.2024) நடைபெற்றது.
காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகடமி மூலமாக ,அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஒரு ஆண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம்( MBBS ) மற்றும் பல் மருத்துவம் ( BDS) படிப்பிற்கான கலந்தாய்வில் பிரமிடு ஐஏஎஸ் அகடமியில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களில் 5 பேருக்கு MBBS படிப்பும்,ஒருவருக்கு BDS படிப்பும் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த பயிற்சியில் பங்கு பெறந்ற மாணவர்களில் சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்“ளியில் தனது பிளஸ் 2 படிப்பை முடித்த , சாக்கோட்டை அருகே உள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் திரு. உடையப்பன் அவர்களின் மகன் ரவி என்பவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் பயில தேர்வாகியுள்ளார்.மேலும் பீர்க்கலைக்காடு பள்ளியில் பயின்ற அதே கமலை கிராமத்தைச் சேர்ந்த நகராஜ் என்பவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் பயில இடம் கிடைத்துள்ளது.
அதேபோல் காரைக்குடியைச் சேர்ந்த காயத்திரி என்பவருக்கு கோயம்புத்துார் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் பயில இடம் கிடைத்துள்ளது. ஆவுடையார் கோயிலைச் சேர்ந்த சிவராஜாவிற்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியிலும், ஆவுடையார் கோயிலைச் சேர்ந்த ஹரி நந்தா-விற்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில எம்.பி.பி.எஸ் பயில இடங்கள் கிடைத்துள்ளன. மேலும் சிங்கம்புணரியை அடுத்த திருக்களாப்பட்டியைச் சேர்ந்த சூர்யா -விற்கு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரியில் பிடிஎஸ் (பல் மருத்துவம்) பயில இடம் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றுள்ள இவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே செலவிடும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆறு மாணவர்களுக்கும் மற்டறும் இவர்களின் வெற்றிக்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்குமான பாராட்டு விழா செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிடு ஐஏஎஸ் அகடாமியில் நடைறெ்றது.
இவ்விழாவில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முன்னாள் மண்டல இயக்குனர் டாக்டர். பி் சுரேஷ் குமார் B.L., M.B.A., Ph.D., அவர்களும், சிவகங்கை மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளார் திரு.டி.முத்துராமலிங்கம் M.Sc, B. Ed, M.Phil., அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
விழா ஏற்பாடுகளை பிரமிடு ஐஏஎஸ் அகடாமி நீட் பயிற்டசவி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வாண்டு, அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நடைபெறவுள்ள ஓர் ஈண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விருப்புவோர் 9952160010 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எங்களின் கல்விப் பணியை நாங்கள் என்றும் தொடர தாங்கள் அளிக்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி. இவ்விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
பேரா. CS கற்பகம், M.Tech.,
இயக்குனர்,
பிரமிடு IAS அகடமி ,
காரைக்குடி.