காரைக்குடி இரயில் சந்திப்பில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினா் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இரயில் சந்திப்பு நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இரயில் பயணம் செய்யும் மகளிர் மற்றும் கழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காரைக்குடி இரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்தனர்.


இரயில்வே காவல் துணை ஆய்வாளர் திரு இளங்கோவன் தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். பெண்கள் பயணங்களில் தாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளில் யார் மீதும் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுக்கத் தயங்கக் கூடாது.

அவசரத் தொலைபேசி 139-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். பெண்கள் பெட்டில் ஆண்கள் பயணம் செய்தால், பெண் பயணிகளை பாலியல் துன்புறுத்தினால் அவசர எண்ணை அழைத்து புகார் தரலாம் என்றர்.
இந்த விழிப்புணர் பிரச்சாரத்தில் பெண் காவலர் ரிச்சு பிரான்ஸிஸ் உள்ளிட்ட பெண்காவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு..

Recent Posts