
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை சுற்றி அமைந்த ஊராட்சி சங்கராபுரம். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக மீண்டும் பதவியேற்றார் தேவி மாங்குடி.
கடந்த 2019-ஆம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காரைக்குடி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களின் மனைவி தேவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிரிதர்ஷினியும் போட்டியிட்டனர். தேவி வெற்றிபெற்றதாக வந்த அறிவிப்பை எதிர்த்து பிரியதர்ஷினி புகார் தெரிவித்தார். மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி பிரியதர்ஷ்னி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தேவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் வெற்றிபெற்றதாக முதலில் அளித்த வெற்றி சான்றிதழ் செல்லும் என உத்தரவிட்டது. நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு தேவி பதவியேற்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தேவி மாங்குடி மீண்டும் சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
20.12.2024 அன்று மாலை சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேவி மாங்குடி பதவியேற்றார்.பதவியேற்பு விழாவில் தேவியின் கணவரும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான மாங்குடி பங்கேற்றார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்