காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி செக்காலை 2-வீதியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பிகேஎன் என்ற சிறப்பு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையின் மருத்துவர் பி.கே.மோகன் குமார் தன்னிடம் சிகிச்சைபெற்று வரும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாக புகாரால் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
காரைக்குடி ஆறுமுக நகரில் வசிக்கும் பெண் கடந்த 5 வருடங்களுக்கு முன் கணவருடன் கழுத்து வலிக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். நாளடைவில் அவர்கள் குடும்ப மருத்துவராகி அவர்கள் வீட்டிற்கு சென்று சிகிச்சையளித்துள்ளார். மருத்துவர் இந்த குடும்பதினருடன் நெருங்கி நட்பாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் கணவர் சிங்கப்பூருக்கு பணிக்கு சென்றுள்ளார். அவரின் வேண்டுகோளின்படியே மருத்துவர் அவர் மனைவிற்கு வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்துள்ளார். பணரீதியாகவும் கொடுக்கல் வாங்கல் மருத்துவருடன் இக்குடும்பத்திற்கு இருந்துள்ளது.
இதன்நிடையே மருத்துவர் அந்த பெண்ணோடு நட்பாகி உடல்ரீதியாக நெருங்கிப்பழகியுள்ளார்.இதனால் குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். அடிக்கடி மருத்துவர் இவர்கள் வீட்டிற்கு வந்து போவது அக்கம் பக்க வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.
அந்த பெண்ணின் மகள் வயதிற்கு வந்த நிகழ்ச்சியை மருத்துவரே முன்னின்டு நடத்தியுள்ளார்.
மகளை மருத்துவராக்க மருத்துவர் மோகன் குமாரிடம் உதவிகேட்டுள்ளார் அந்தப்பெண். அவரும் பெண்ணின் மகளை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்துள்ளார் . பள்ளி விடுமுறை நாட்களில் இவரே மகளை விடுதியிலிருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது ஒருமுறை காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு இவர் பின்இருக்கையில் அமர்ந்து அந்த மாணவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மருத்துவரின் பாலியல் தொல்லையை மகள் தாயிடம் தெரிவித்தாள் ஆனால் அந்தப் பெண்னோ கண்டுகொள்ளவில்லை,இந்நிலையில் தன் தாயுடன் மருத்துவரின் நெருக்கத்தை மகள் தெரிந்துகொண்டார்.
மருத்துவப் படிப்பிற்காக மாணவிற்கு பல முறை மருத்துவர் மோகன் குமார் பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது அவர் மாணவியை தொடுதல் மூலம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். மகள் இதைப்பற்றி பலமுறை தாயிடம் கூறியும் அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை.
அந்த பெண் தொடங்கிய ஜவுளிக்கடை கடைக்கு மருத்துவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.நெருக்கம் தொடர்ந்த நிலையில் தான் அந்தப் பெண்ணுக்கு மருத்துவருடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.அதிக போதையில் மிக நெருக்கமாக புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து காரைக்குடி திரும்பிய பெண்ணின் கணவர் மனைவியின் நிலையறிந்து மனைவி பெயரிலிருந்த சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளார்.விவாகரத்தும் கோரியுள்ளார். ஆனால் மனைவி விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை.
மாணவி தந்தையிடம் மருத்துவர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். மேலும் விஷஊசிபோட்டு என்னையும் தம்பியையும் கொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளதையும் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் கணவரும்,மருத்துவரும் ஒருமுறை ரோட்டில் சண்டையிட்டு கைகலப்பாகியுள்ளது.
மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிச்சாமி முன்னிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்துறையினரால் மருத்துவர் மோகன் குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மருத்துவர் பி.கே.மோகன்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்டேட் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
“வேலியே பயிரை மேயந்த கதையாக”குடும்ப மருத்துவரே ஒரு குடும்பதை சீரழித்தது காரைக்குடி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் மோகன்குமார் பற்றி விசாரித்தபோதுதான் அவரின் பாலியல் சேட்டைகள் தெரியவருகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அறையில் நர்சுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த நிலையில் அவசர மாக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வந்த உதவி மருத்துவர் கண்டறிந்ததால் அன்றோடு அந்த மருத்துவனைக்குச் செல்வதை தவிர்த்துள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது காம சங்கேத வார்த்தைகளால் நர்சுகளிடம் பேசுவதை பலர் கண்டுள்ளனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்