காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அழுகு நிலையத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகு நிலைய பொறுப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் இளஞ்சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவிவருகிறது.
காரைக்குடி நகரில் பள்ளியில் பயிலும் மாணவிக்கு தன் வகுப்பு தோழியான சக மாணவியால் அழகு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அழகு நிலையத்தில் உள்ளவர்களின் ஆசை வார்தைகளால் மாணவியை மயக்கி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக வழக்குபதியப்பட்டு 4-பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி செக்காலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் அருகில் கீரின் டிரன்ஸ் ( Green Trends) என்ற பெயரில் அழுகு நிலையம் அமைந்துள்ளது. இந்த அழகு நிலையத்தை மதுரையைச் சேர்ந்த ஒருவர் நடத்த உரிமை பெற்றுள்ளார். அவர் மேற்கு வங்க மாநிலம் டார்லிங்கைச் சேர்ந்த மன்ஸில் அழகு நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார்.
இந்த அழகு நிலையத்திற்கு காரைக்குடியைச் சேர்ந்த லெட்சுமி என்பவரை மேலாளாராக பணியமர்த்தியுள்ளார் மன்ஸில். லெட்சுமியின் மகள் தன்னுடன் பயிலும் மாணவிகளை கண்புருவத்திருத்தம் மற்றும் முக அழுகு செய்ய அழைத்துவந்துள்ளார்.
அப்படி அழைத்து வரப்பட்ட மாணவிகளுள் ஒரு மாணவிற்கு ஆசை வார்த்தைகள் கூறி அழகு நிலைய பொறுப்பாளர் மன்ஸில், லெட்சுமி மற்றும் அவரின் மகளின் உடந்தையுடன் நட்பாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒரு நாள் தனது மகளை இருசக்கரவாகனத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் அழைத்து செல்வதை பார்த்துள்ளார். இது குறித்து மகளிடம் விசாரித்துள்ளார். மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை பள்ளி நிர்வாகத்திடமும், காவல் துறையிலும் புகார் அளித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் விசாரித்து அழகு நிலைய மேலாளர் லெட்சுமியின் மகளை பள்ளியை விட்டு நீக்கியுள்ளது.
இந்நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு ) திருமதி மகேஸ்வரி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தி அழகுநிலைய பொறுப்பாளர் மன்ஸில், மேலாளர் லெட்சுமி, தேவகோட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து லெட்சுமி,விக்னேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகு நிலைய பொறுப்பாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அழகு நிலையத்தில் மேலாளாராக இருந்த லெட்சுமியின் மகள் முதலில் படித்த அரசு பள்ளியில் அவரின் நடத்தை சரியில்லாத காரணத்தால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அப்படி நீக்கப்பட்ட மாணவியை இந்தபள்ளி எப்படி விசாரிக்காமல் சேர்த்துக் கொண்டது என்பது பலருக்கு வியப்பை அளிக்கிறது. இது குறித்து நமக்கு கிடைத்த தகவலில் நகர அரசு நிதியுதவி பெரும் பள்ளியின் தற்காலிக ஒப்பந்த ஆசிரியை ஒருவர் இந்த அழகு நிலையத்திற்கு அடிக்கடி வந்துள்ளார். அவரிடம் நட்பு ரீதியாக பழகிய லெட்சுமி தனது மகளை அந்த ஆசிரியையின் உதவியுடன் அந்த பள்ளியில் சேர்த்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் கவனிக்க வலியுறுத்தியுள்ளார்,மேலும் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் யாரும் மிகையான கற்பனைகளை வெளியிட்டு பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ஆனால் காரைக்குடியில் சிலர் சமூக ஆர்வலர் போர்வையில் தன் சுய விளம்பரத்திற்க்காக இந்த பாலியல் வழக்கை மிகையான கற்பனைபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். காவல் துறை எச்சரிக்கையால் அந்த பதிவையும் நீக்கியுள்ளனர்.
இந்த வழக்கை சம்பந்தப்படுத்திபள்ளி மாணவிகள் பலரின் கருமுட்டையை எடுத்து விற்கப்படுவதாக சமூக ஊடகத்தில் வெளியானதால் பலரும் அதை ஊண்மை என்று நம்பி இது குறித்து பேச ஆரம்பித்து விடடனர்.
பள்ளி மாணவிகள் பலரின் கருமுட்டையை எடுத்து விற்கப்படுவதாக பதிவை வெளியிட்ட சமூக ஆர்வலரிடம் தகுந்த ஆதாரம் இருக்கிறதா..? அந்த ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் சமூக அக்கரையுடன் சமர்ப்பித்து இருக்கலாமே.. ? வாட்ஸ்ஆப் முகநுால் போன்றவற்றில் பதிவிட்டு மக்கள் மத்தியில் ஏன் அச்சத்தை ஏற்படுத்தவேண்டும்.
இது போல் மாணவிகளின் கரு முட்டையை எடுத்து விற்க முடியுமா என மருத்துவரிடம் கேட்டபோது,அவர் கடந்த ஒருவாரமாக இந்த செய்தி பரவுவதாக தெரிவித்தார் மேலும் அவர் இதுபோல் மாணவிகளிடம் கருமுட்டை எடுத்து விற்பது அவளவு இலேசானதல்ல, இதற்கு அதிக செலவு பிடிக்கும். பெரும்பாலும் மருத்துவ ரீதியாக கருமுட்டை எடுக்க அதிநவீன அறுவை சிகிச்சை கூடங்கள் வேண்டும். இது சாத்தியமற்ற ஒன்று என்று தெரிவித்தார். கரு முட்டையை மருத்துவ ரீதியாக வளர்ச்சியடையச் செய்து பின்னர்தான் எடுக்க முடியும் என்றார்.
பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல் சமூக ஊடகங்களில் ஆதாரம் இல்லாமல் வதந்தி பரப்பும் சுய விளம்பரப் பிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்..
இது போன்ற வதந்திகள் பரப்புவதால் பள்ளியில் படிக்கும் இதர மாணவிகளின் எதிர்காலம் என்னவாகும், பெற்றோர்கள் எத்தகைய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்