காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த இலவச கண் பரிசோதனை முகாம் கறித்து KSON நிர்வாகிகள் வெளிட்ட செய்திக் குறிப்பில்:-

காரைக்குடி எம்.ஏ.எம் திருமண மண்டபத்தில் 25.02.2023 அன்று நடைபெற்ற காரைக்குடி ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர் நலசங்கம் மற்றும் அகர்வால் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் கலந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த அகர்வால் கண் மருத்துவமனைக்கும்,

இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வீரபாண்டியன் அவர்களுக்கும், போஸ்ட் மாஸ்டர் சுப்பிரமணியன் அவர்களுக்கும்,

குறைந்த வாடகையில் மண்டபம் வழங்கிய MAM திருமண மண்டபம் உரிமையாளர் அவர்களுக்கும், அவரிடம் குறைந்த விலையில் பேசி ஏற்பாடு செய்த முத்து வீடியோஸ் திரு முத்துக்கருப்பன் அவர்களுக்கும்,

சிறப்பாக பணியாற்றிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரு.
முத்துராஜன், முருகேசன், சுப்பு, சரவணன், சீனிவாசன், ரஜினிகாந்த், கருத்தரசன், நாகலிங்கம், மெய்யப்பன், பாலமுருகன், சாய் தர்மராஜன், சௌந்தர் ஆகியோருக்கும்

மதிய உணவு ஸ்பான்சர் செய்த திரு செந்தில்குமார் வள்ளி வீடியோஸ் அவர்களுக்கும்,

குறைந்த விலையில் உணவு வழங்கிய திரு சரவணன், செந்தூர் உணவகம் அவர்களுக்கும்,

பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும் மற்றும் KSON நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

தேவகோட்டை நகர காவல் துறை அதிரடி : குற்றவாளிகளை கைது செய்து 36 சவரன் தங்க நகைகள் மீட்பு…

60 வருடங்களுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய நோக்கியா ( NOKIA )நிறுவனம்..

Recent Posts