
காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கி கௌரவித்தனர் சமூக ஆர்வலர்கள் .
65 ஆண்டுக்கு பிறகு தமிழக அணிக்கு தேர்வான சிவகங்கை மாவட்ட கோல்கீப்பர் கவச உடையின்றி தவித்த நிலையில் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் பரிசு வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சண்முகபிரியா ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட அணியில் பங்கேற்று விளையாடிய நிலையில் தமிழக அணிக்கு கோல்கீப்பராக தேர்வானார்.

65 ஆண்டுகளுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்திலிருந்து கோல்கீப்பராக தேர்வு பெற்ற சண்முகபிரியாக முக்கிய உபகரணமான கவச உடை வாங்க பணம் இன்றி தவித்து வந்தார்
பயிற்சியளிக்கும் வாஸம் அறக்கட்டளை இலவச பயிற்ச்சியும் கல்வி கட்டணம் அளித்து வரும் நிலையில்
சண்முகப்பிரியாவிற்கான 30,000 மதிப்பிலான கவச உடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை ஊற்றுகள் தன்னார்வ சமூக ஆர்வலர்கள் இன்று வழங்கினர் கவச உடை பெற்றுக் கொண்ட மாணவி சண்முகபிரியா அவற்றை அணிந்து கொண்டு பயிற்ச்சி மேற்கொண்டார்.அவரது குழுவினர் சமூக ஆர்வலர் குழுவிற்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்