காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆண்டு பொன்விழா: விமர்சையாக கொண்டாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆண்டுகள் ஆன பொன்விழாக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.
காரைக்குடியில் செக்காலை ரோடு-100 அடி ரோடு சந்திப்பில் 1975-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் அரும் பெரும் தொண்டினை போற்றும் வகையில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இச்சிலையை திறந்து வைத்தார்.

1975-ல் சிலை சிலை அமைப்புக் குழுவினரான புரவலர்கள் காரைக்குடி இராம.சுப்பையா, சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி, இரா.சுப்பிரமணியம், சாமி.சமதர்மம் ஆகியோரின் முயற்சியால் சிலை நிறுவப்பட்டது. தற்போது பொன்விழாவை பெரியார் சிலை கொண்டாடுகிறது.

இந்த பொன்விழா கொண்டாட்டம் 13.03.2024 புதன் கிழமை காலை பத்து மணியளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

விழாவில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, திமுக இலக்கிய அணிச் செயலாளர் தென்னவன், நகர்மன்றத் தலைவர் முத்து துரை, திராவிட கழக மாவட்ட தலைவர் சாமி திராவிடமணி உள்ளிட்ட ஏராளமான திராவிட கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.

செய்தி& படங்கள்
சிங்தேவ்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது பாரத் ஸ்டேட் வங்கி…

தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Recent Posts