காரைக்குடியில் இன்று சிவகங்கை மாவட்ட பொது சுகாதார நோய்தடுப்பு இயக்குநரகம் மற்றும் நேரு யுவகேந்திரா சிவகங்கை உடன் தோள் கொடு தோழா இளையோர் நல சங்கம் இணைந்து பள்ளிவாசல் செஞ்சையில் துவங்கி கீழஊரணி, கொப்புடையம்மன் கோவில் முன், 1st beat, II nd Beat, பழைய பேருந்து நிலையம், வ.உசி ரோடு,கழனிவாசல், பர்மாகாலனி, பாரிநகர், ஆரியபவன் இறுதியாக புதிய பேருந்துநிலையம் வரை கொரோனோ மூன்றாம் அலை பற்றியும் அதன் முன் ஏற்பாடுகள் பற்றியும் தெளிவாக எடுத்து உரைத்து பிரச்சாரம் நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டதுடன் பிரச்சாரத்தின் முக்கியமான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும், முகக்கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளியுடன் அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
இதனை தோள் கொடு தோழாவின் ஒருங்கிணைப்பாளர் நசீர் அவர்களும் நேரு யுவகேந்திராவின் தன்னார்வலர் அருண்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி & படங்கள்
அருண் யாமிழன்