முக்கிய செய்திகள்

காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளிலும், ஒழுங்கு விதி மீறல்களிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.