முக்கிய செய்திகள்

இன்று கார்கில் வெற்றி தினம் ..


இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர்.

இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது.

இந்த நாள் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கிமீ வரை ஆக்கிரமித்தனர்.

இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது.

இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்படுகிறது.

அவ்வகையில் இன்று நாடு முழுவதும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.