கோவை 1998 கலவரம் குறித்த மனதை உலுக்கும் சிறுகதைத் தொகுப்பு: கௌதம் ஷாம்

கோவை கலவரத்தை கதை வடிவில் நம் கண் முன்னே காட்டுகிறார் எழுத்தாளர் அ.கரீம். புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு கூர்மையாக நம் மனசாட்சியைத் தாக்கிக் குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது. ஆசிரியரின் இலக்கிய நடை எழுத்து நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

பலரின் கவனத்தை ஈர்த்தப் புத்தகம் இது. இப்புத்தகத்திற்கு ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா அணிந்துரை எழுதியுள்ளனர்.

ச.தமிழ்ச்செல்வனின் அணிந்துரையை சுருக்கமாகப் பார்ப்போம் ..

1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே உக்கிரத்துடன் நம்மை வந்து தாக்குகின்றது. இக்கதைகள் ஒவ்வொன்றும் சில காட்சிகளை நம் மனங்களில் அழுத்தமாக வரைந்துவிட்டன. துயரத்தில் தூரிகை தொட்டு வரைந்த அந்த ஓவியங்கள் அழியாத கோலங்களாக வாசக மனத்திரையில் நிலைபெற்றுவிட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு மனதை உலுக்கிய தொகுப்பு இது.

ஆதவன் தீட்சண்யா அணிந்துரையை சுருக்கமாக..

பத்திருபது பேர் கூடுகிற ஒரு சம்பிரதாயப் போராட்டத்தைக்கூடத் தடியடி நடத்திக் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைப்பதில் முனைப்பாய் இருக்கிற காவல் துறை சகல அதிகாரங்களும் ஆயுதங்களும் கைவசமிருந்தும்கூட ஏன் அமைதி காத்தது? இந்தக் கேள்விக்கான பதிலைக் கரீமின் கதைகளுக்குள் அங்குமிங்குமாகக் கண்டடைய முடிகிறது.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியப் புத்தகம் இதன் விலை 140/- ரூபாய் மட்டுமே..! VPP வசதி உண்டு தபால் செலவுடன் சேர்த்து 165 ரூபாய் வரும்.

புத்தகத்தை வாசிக்க விரும்பும் வாசகர்கள் தங்களின் முகவரியை அலைபேசி எண்ணுடன் பின்னூட்டத்திலோ அல்லது இன்பாக்ஸிலோ தெரிவிக்கலாம்.

Gowtham Sham முகநூல் பதிவில் இருந்து…

Karim’s Short Story