கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு :கர்நாடக அரசு நிறுத்தி வைப்பு…

கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கன்னடர்களுக்கே ஒதுக்க வேண்டும் என கர்நாடக அரசு மசோதா கொண்டு வந்தது. புதிய மசோதாவுக்கு தொழில் நிறுவனங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கர்நாடக அரசு பின்வாங்கியது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக கவலை தெரிவித்து Nasscom அறிக்கை வெளியிட்டது.

தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா அமையும் என மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான Nasscom அச்சம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக கர்நாடக அரசு தொழில்துறை பிரதிநிதிகளுடன் அவசர சந்திப்பை நடத்த வேண்டும் எனவும் Nasscom கோரிக்கை வைத்த நிலையில் சட்ட மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கர்நாடகாவில் கனமழை எதிரொலி :காவிரி ஆற்றில் 40,500 கன அடி நீர் வெளியேற்றம்..

மைக்ரோ சாப்ட் விண்டோ மென்பொருள் செயலிழப்பு காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு..

Recent Posts