முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவு..

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக

சட்டப்பேரவைக்கு தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் மாலை ஆறு மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

காலை 9 மணி வரை 10.56 சதவிகித வாக்குபதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.