முக்கிய செய்திகள்

கர்நாடகா : ராஜினாமா செய்த 10 உறுப்பினர்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு..

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ்,மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்.

ஆனால் சபாநாயகர் 10 உறுப்பினர்களும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ராஜினாமா செய்த உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ராஜினாமா செய்த உறுப்பினர்கள் ஆஜராகுமாறு உத்தவிட்டுள்ளது.