முக்கிய செய்திகள்

கர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்…


கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏபிபி நியூஸ்-லோக்நிதி சிஎஸ்டிஎஸ் நேற்று கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும். எனினும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸுக்கு 2-ம் இடமும் மஜதவுக்கு 3-ம் இடமும் கிடைக்கும். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 60% பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மொத்தம் உள்ள 224 இடங்களில் பாஜக 89 முதல் 95 இடங்களிலும், காங்கிரஸ் 85 முதல் 91, மஜத 32 முதல் 38 இடங்களிலும் வெற்றி பெறும். எனினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக, மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

இதுபோல சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும் என 30% பேர் விருப்பம் தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு 25% பேரும் மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமிக்கு 20% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது