முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்..


கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

வரும் மே 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குபதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15ம் தேதி எண்ணப்பட்டு அன்றையே நாளிலேயே முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் ( 17 ஏப்ரல், 2018) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கால் மீதான பரிசீலனை ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாள் ஏப்ரல் 25ம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.