
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆண்டுவருகிறது. நேற்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடியூரப்பா உடல் நிலை காரணமாக பதவி விலவதாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பாவை எதிர்த்து அமைச்சர்கள் பலர் போரக்கொடி துாக்கியுள்ளனர், கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதால் முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் மழுப்பலாக பதிலளித்து கேள்வியிலிருந்து நழுவினார்.