கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி : ப.சிதம்பரம் டிவிட்..

கர்நாடகவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்.,-ஐதக கூட்டணி 4 இடங்களை வென்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்,, மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில்

“கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது.

இதில் கற்க வேண்டிய பாடம், கூட்டணி பலன் தந்துள்ளது” என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.