முக்கிய செய்திகள்

வலைத்தளங்களில் வைரலாகும் சித்தராமய்யாவின் ‘குத்து’ விளையாட்டு!

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா, பெங்களூருவில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேயர் கவிதா சனிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பெண்களின் தற்காப்புக்கு கராத்தே சிறந்த கலையாக விளங்குவதாக பாராட்டிப் பேசிய முதலமைச்சர் சித்தராமய்யா, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதிலெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை… அவர் செய்த மற்றொரு காரியம்தான் இப்போது வைரலாகி வருகிறது. மேயர் கவிதா சனிலுடன் கராத்தே விளையாடுவது போல் போஸ் கொடுத்த சித்தராமய்யா, அவருடைய இடுப்புப் பகுதியில் விளையாட்டாக குத்துவதுபோல் செய்து காட்டினார். கவிதாவும் சித்தராமய்யாவை குத்தி விளையாடினார். இந்த சுவாரஸ்யமான காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Karnataka CM Siddaramaiah’s ‘Punch’  thanthira