கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு முடிவு: காங்கிரஸூக்கு கூடுதல் இடங்கள்


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் மோதிய இந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் கர்நாடக தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொங்கு சட்டப்பேரவை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு தொகுதி தவிர மற்ற 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் நேருக்குநேர் மோதின. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு – ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் வெளியாகின. தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டன. வாக்குப்பதிவு நடந்த 222 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்கும்.

பல்வேறு டிவி சேனல்கள் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவகள் வருமாறு:

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

காங்கிரஸ் 90 – 103

பாஜக 80 – 93

மதச்சார்பற்ற ஜனதாதளம்: 31 – 39

பிறர் 2-4

இந்தியா டுடே

காங்கிரஸ் 116 – 118

பாஜக 79 – 92

மதச்சார்பற்ற ஜனதாதளம்: 22 -30

பிறர் 1-4