கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம், நேரடியாக அன்னிய முதலீடு பெற, அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதல் கிடைக்க, முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில் ஆஜராக, கார்த்திக்கு, சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, விசாரணையில் உள்ளது. ஜூலையில், மத்திய உள்துறை அமைச்சகம், கார்த்தியை கண்காணிக்கப்படும் நபர் எனவும் அறிவித்து.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பிப்.2-ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.