
சிவகங்கை மக்களவை தொகுதி தற்போதைய உறுப்பினரும் காங்., வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் இன்று காலை காரைக்குடியில் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் தான் கடந்த 5 ஆண்டுகளில் செய்தவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சிவகங்கை தொகுதிக்கான தேவைகளை மத்திய அமைச்சர்கள்,உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போது சிவகங்கை நகருக்கு போதுமான அளவு செய்ய முடியவில்லை என்றும் வரும் காலங்களில் வேலுநாச்சியார் மகளிர் காவலர் பயிற்சி மையம் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறான இன்று கிறிஸ்தவ மக்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக வந்தார்கள். அவர்களுடன் குருத்தோலை சுமந்து ஊர்வலத்தில் சென்றார்.
அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்