
சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதிக்குட்பட்ட காரைக்குடி நகரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

மேலும் காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு கே ஆர் ராமசாமி அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தினார்.

பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தினார்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் KR. ராமசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சாக்கோட்டை ஒன்றியம், அமராவதிபுதூர் ஊராட்சியில் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் KR. ராமசாமி கலந்து கொண்டார்.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்