முக்கிய செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி..


தி.மு.க. தலைவா் கருணாநிதி நீண்ட நாட்களுக்கு பின்னா் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கட்சியின் தலைவா் மு.கருணாநிதி வருகை தந்துள்ளாா்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவா் கருணாநிதி  ஒரு வருட காலமாக தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தா்ா. மேலும், பொது நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தாா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் முரசொலி பவள ஆண்டை முன்னிட்டு கோடம்பாக்கம் முரசொலி பத்திாிகை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கருணாநிதி நோில் வந்து பாா்த்தாா். அதன்பின்பும் அவா் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாா்.

கருணாநிதி தொடா்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாகவும் கருணாநிதியின் மருத்துவா் தொிவித்திருந்தாா். மேலும் தொடா்ந்து சில அதிசயங்கள் நடைபெற உள்ளதாகவும் அவா் தொிவித்திருந்தாா்