முக்கிய செய்திகள்

கருணாநிதியின் நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்..


சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.

பிற்பகல் 2.20 மணி அளவில் விமானம் நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை, ஆளுநர் , சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் பின்னர் அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு சென்றார் . அங்கு, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்தனர். குடியரசுத் தலைவர் வருகையைமுன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.