கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை வெங்கையாநாயுடு சென்னை வருகை..


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க நாளை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு சென்னை வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக வெங்கையாநாயுடு நலம் விசாரித்தார்.

முன்னதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று இருப்பதால் அவர் குணமடைய பிரார்த்திப்பதாக தலைவர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த் ஆகியோர் ட்விட்டரில் வாயிலாக கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.